நிகருனக்கொருவர்.........
பல்லவி
நிகருனக்கொருவர் இல்லை இவ்வுலகில்
அகிலம் போற்றும் கல்யாண ராமா
அனுபல்லவி
பகலவன் குலத்துதித்த மாதவனே கேசவனே
இகபரமிரண்டிலும் சுகமளிக்கும் ராகவனே
சரணம்
குகனுடன் ஐவரென்று நேசமுடனுரைத்தவனே
புகழ்மிகு அயோத்தி மாநகர் மன்னனே
சகமனைத்தும் புகழும் சீதையின் நாயகனே
புகலெனப் பணிந்து உனைச்சரணடைந்தேன்
No comments:
Post a Comment