தரிசனம் தந்தெனை.......
பல்லவி
தரிசனம் தந்தெனைக் காத்தருள்வாய் ராமா
கரிசனம் என் மேல் உனக்கில்லையா ஐயா
அனுபல்லவி
சரி நிகர் சமானமில்லாத கேசவனே
கிரிதனைக் குடையாக்கி குவலயம் காத்தவனே
சரணம்
கரிக்கும் காரிகைக்கும்பயமளித்தவனே
பரிவுடனடியார்க்கு நல்லருள் புரிபவனே
விரிகமல மலரை நாபியில் வைத்திருக்கும்
அரியே அனைவரும் வணங்கிடும் பரம்பொருளே.
No comments:
Post a Comment