உன்னைச் சரணடைந்தேன் ........
பல்லவி
உன்னைச் சரணடைந்தேன் ஶ்ரீ ராமா
என்னை ஆண்டருள இதுவே தருணம்
அனுபல்லவி
அன்னை தந்தை சொல் கேட்டு வனம் சென்ற
இன்னமுதே கேசவனே இனகுலதிலகனே
சரணம்
முன்னம் அறியாத சிறு வயதில் யான் செய்த
சின்னஞ்சிறிய பிழை அனைத்தையும் பொறுத்து
பன்னக சயனனே பழவினையால் யான் படும்
இன்னல்கள் அனைத்தும் விலகிட வேண்டியே
No comments:
Post a Comment