எந்த நேரமும் உந்தன் நமமே...
பல்லவி
எந்த நேரமும் உந்தன் நமமே
மந்திரமாய்த் துதித்தேன் ராமா எனக்கருள்வாய்
அனுபல்லவி
தந்தையும் தாயும் பந்துவும் நீயென
உந்தனை நினைத்தேன் உத்தமனே கேசவனே
சரணம்
இந்திரன் பிரமன் நரர்சுரர் முனிவர்கள்
சந்திர சூரியன் அனைவரும் வணங்கிடும்
சுந்தர வடிவினனே சூரிய குலத்தோனே
முந்தைய பழவினைப் பயன்கள் தொலைந்திட
No comments:
Post a Comment