அன்னை சீதையின்....
பல்லவி
அன்னை சீதையின் கரம் பிடித்ததாலன்றோ
இன்னம் புகழ் கீர்த்தி அடைந்தாய் ஶ்ரீராமா
அனுபல்லவி
முன்னம் மாயா சீதையை ராவணன்
தன்னுடன் சிறையெடுத்து இலங்கையில் வைத்தான்
சரணம்
பன்னக சயனனே பார்புகழ் கேசவனே
தன் சக்தியாலவனை எரிக்காமலே
உன்னை அரக்கனுடன் போரிட வைத்து
உன் பெருமை உலகறியச் செய்த எங்கள்
No comments:
Post a Comment