எனக்கென்ன மனக்கவலை........
பல்லவி
எனக்கென்ன மனக்கவலை ஶ்ரீராமா
உனதிரு பதமே கதியெனத் துதித்தபின்
அனுபல்லவி
தனக்குவமையில்லாத தனிப்பெரும் தெய்வமே
அனைத்தும் நீயே ஆதி கேசவனே
சரணம்
வனமாலை துளபம் கௌத்துபமணிந்தவனே
சனகாதி முனிவரும் நரர்சுரரும் வணங்கிடும்
அனந்த சயனனே ஆதிமூலமே
ஜனன மரண பயம் களைந்தேன் உனதருளால்
No comments:
Post a Comment