கண்ணனும் நீயே........
பல்லவி
கண்ணனும் நீயே ராமனும் நீயே
வண்ணமுற எனைக் காக்கும் தெய்வமும் நீயே
அனுபல்லவி
எண்ணமெலாம் உனையே நினந்துருகி தினமும்
பண்ணிசைத்து பாடித் துதித்தேன் கேசவனே
சரணம்
உண்ணும் சோறும் பருகும் நீரும்
தின்னும் வெற்றிலையும் அனைத்தும் நீயே
விண்ணவரும் மண்ணவரும் வியந்து போற்றும்
மண்ணையுண்ட வாயனே தசரத ராமனே
No comments:
Post a Comment