உனக்கிது அழகோ........
பல்லவி
உனக்கிது அழகோ ஶ்ரீ ஜெயராமா
எனக்கருள இன்னும் தாமதம் செய்வதேன்
அனுபல்லவி
சினந்து நீ வெறுத்தாலும் பரிந்தெனை அணைத்தாலும்
உனது திருவடியே சதமெனத் துதித்தேன்
சரணம்
சனகாதி முனிவரும் நாரதரும் நான்முகனும்
அனு தினம் வணங்கிடும் ஆதிகேசவனே
பனையளவு இடர் வரினும் தியளவாய்ச் செய்திடும்
இனகுலதிலகனே கோசலை பாலனே
No comments:
Post a Comment