தயரதன் மைந்தனே......
பல்லவி
தயரதன் மைந்தனே தயாகரனே
தயவளித்தெனையே காத்தருள்புரிவாய்
அனுபல்லவி
அயனுடன் அமரரும் அமரேந்திரனும்
நயமுடன் பணிந்தேத்தும் ஶ்ரீ ஜெயராமா
சரணம்
கயவராய்த் திரிந்த அரக்கர் குலத்தை
புயலெனத் தோன்றி வதைத்த கேசவனே
இயலிசை நாடக நாட்டியப் பிரியனே
துயரறு சுடரடி தொழுது பணிந்தேன்
No comments:
Post a Comment