தஞ்சமென்றுனை.........
பல்லவி
தஞ்சமென்றுனைப் பணிந்தேன் தாமரைப் பாதனே
வஞ்சனை செய்யாமல் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
கஞ்சனைக் காய்ந்த இன்னமுதே கேசவனே
நெஞ்சார உன் நாமம் நாளும் துதித்து
சரணம்
அஞ்சனவண்ணனே அயோத்தி மன்னனே
நஞ்சரவணை துயிலும் நாராயணனே
வெஞ்சமரிலரக்கர் குலமழித்த ராகவனே
குஞ்சரமன்னனுக்கு அபயமளித்தவனே
No comments:
Post a Comment