அடைக்கலம் நீயே....
பல்லவி
அடைக்கலம் நீயே ஆரமுதே ராமா
கடைக்கண் வைத்தெனை காத்தருள்வாயே
அனுபல்லவி
படைநடத்தி அரக்கர் குலமழித்த கேசவனே
இடை மெலிந்த சீதையின் கரம் பிடித்த ராகவனே
சரணம்
இடையர் குலம் காத்த மதுசூதனனே
குடையாக க்குன்றேந்தி குவலயம் காத்தவனே
விடையேறும் ஈசன் மகேசன் நேசனே
தடையின்றி உனதருள் கிடைத்திடப் பணிந்தேன்
No comments:
Post a Comment