கண்ணுறங்கு...........
பல்லவி
கண்ணுறங்கு கண்ணுறங்கு ஶ்ரீராமா கண்ணுறங்கு
பண்ணிசை பாடி பதமலர் பணிந்தேன்
அனுபல்லவி
மண்ணிலவதரித்து மானிடனாய்த் திரிந்த
புண்ணியனே புவனம் போற்றும் கேசவனே
சரணம்
கண்டவர் மனம் மயங்கும் கருமணியே இன்னமுதே
புண்டரிக மலரமர்ந்து புவனம் படைத்தவனே
தென்னிலங்கை அரக்கர்தம் சிரம் கொய்த மன்னவனே
எண்திசையும் புகழ் விளங்கும் செம்பொன்னே தேனே
விண்ணவரும் மண்ணவரும் வியந்து பாராட்டும்
தண்மதி முகத்தோனே தாமரை பதத்தோனே
பெண்மணி சீதையின் மனம் கவர்ந்த பேரழகே
கண்மணியே ராகவனே கோசலை மைந்தனே
No comments:
Post a Comment