சதமல்ல இவ்வுலக.......
பல்லவி
சதமல்ல இவ்வுலக வாழ்வென்றறிந்துமுன்
பதமலரைப் பணியாத மூடரை என்சொல்வேன்
அனுபல்லவி
நிதமுனைத் துதிக்காமல் காசுபணம் தேடி
விதம் விதமாயலையும் வீணரை என்சொல்வேன்
சரணம்
மதம் மொழி இனமெனத் தம்முள் சண்டையிட்டு
பதவி புகழென்று வாழ்நாளை வீணாக்கும்
மதி கெட்ட மாந்தரை நானென்ன சொல்வேன்
கதி நீயே ஶ்ரீராமா எனைக் காத்தருள்வாய்
இதமுறப் பேசி மதிமயக்கி ஏமாற்றும்
புது வித மனிதரை என் சொல்வேன் கேசவனே
உதவாக்கரையாக ஊர்சிற்றித்திரிந்து விட்டு
விதியைக் குறை கூறும் மனிதரை என் சொல்வேன்
No comments:
Post a Comment