ஒருமுறை ஶ்ரீராமா.....
பல்லவி
ஒரு முறை ஶ்ரீராமா என்றழைத்தால் போதும்
கருணை மழை பொழிவான் காத்தருள் புரிவான்
அனுபல்லவி
குருவும் தந்தையும் தாயும் தோழனுமாய்
அருகினிலிருந்து அரவணைத்திடுவான்
சரணம்
தருமநெறி காக்க தரணியிலவதரித்த
பெருமைக்குரிய கேசவன் நாரணன்
இருவினைப் பயன்களால் படுந்துயர் களைந்திடுவான்
திருவின் நாயகன் தீனசரண்யன்
No comments:
Post a Comment