நாமமொன்றே போதும்.........
பல்லவி
நாமமொன்றே போதும் ஶ்ரீ ராமா
காமக்ரோதமெனும் அறுபகை யகல - உன்
அனுபல்லவி
தாமரை நாபனே மாதவா கேசவா
பூமியில் நானென்றும் இனிது வாழ்ந்திடவுன்
சரணம்
பூமகளை மணமுடித்த புண்ணியமூர்த்தியே
மாமறைகள் போற்றும் மதுசூதனனே
பாமரரும் பண்டிதரும் தேவர்களுமிந்திரனும்
மாமுனிவர்களும் பணிந்தேத்துமுன் திவ்ய
No comments:
Post a Comment