தெய்வ பக்தியில்லாத.......
பல்லவி
தெய்வ பக்தியில்லாத இசை ஞானம் வீணே
மெய்ப்பொருளே ராமாஇரண்டும் எனக்கருள்வாய்
அனுபல்லவி
பொய்யும் புரட்டும் மலிந்த இவ்வுலகில்
மெய் ஞானம் பெறவே உனைப் பணிந்தேன் கேசவனே
சரணம்
செய்யாதன எதுவும் செய்யாதிருந்திடவும்
ஐயமும் பிச்சையும் இயன்றவரை செய்திடவும்
வையத்து வாழ்ந்திடும் மனிதருக்கு உதவிடவும்
பையத்துயின்றிடும் பரமனே வேண்டினேன்
No comments:
Post a Comment