நீயருள்வாய்......
பல்லவி
நீயருள்வாய் ஶ்ரீ ரகு குலதிலகா
தாயினும் மேலான தயாபரனே எனக்கு
அனுபல்லவி
ஞாயிறை மிஞ்சும் தேசுடைய கேசவனே
ஆயிரம் நாமங்களுடைய ராகவனே
சரணம்
தூயவனே துயர் துடைத்திடும் மாயனே
மாய மானைக்கொன்ற சீதாராமனே
நேயமுடன் உனது திருவடி பணிந்தேன்
நோயெனும் பவவினை அகன்றிட வேண்டினேன்
No comments:
Post a Comment