"விஷ்ணு சஹஸ்ரநாம" பாராயணத்தின் முடிவில் வருகின்ற அதே ஸ்லோகம்தான்...
காயேன வாசா மனஸேந்த்ரியை வா
புத்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி"
இதன் பொருளையும் அறிந்தவர்கள் அனேகர் இருக்கக்கூடும்..
இருந்தாலும் அறியாத ஓரிருவருக்காக இந்த ஸ்லோகத்தைப் பதம் பிரித்து பொருள் தருகிறேன்.
காயேன − உடலாலோ வாசா − வாக்கினாலோ. மனஸ் − மனதினாலோ
இந்த்ரியை (வா) − இந்த்ரியங்களினாலோ புத்தி − அறிவினாலோ
ஆத்மனா (வா) ஆத்மாவினாலோ ப்ரக்ருதே ஸ்வபாவாத் − இயற்கையான குணவிஷேஸத்தினாலோ
யத்யத் − எதுஎதைச்க ரோமி − செய்கின்றேனோ ஸகலம் − அவை அனைத்தையும்
பரஸ்மை நாராயணா இதி − பரமபுருஷனாகிய நாரயணனுக்கே
ஸமர்ப்பயாமி − ஸமர்ப்பிக்கிறேன் (அர்ப்பணிக்கிறேன்)
அவன் எதிர்பார்ப்பதெல்லாமே, இந்த த்ரிகரண சுத்தியே!(மனம், வாக்கு, காயம் என்ற முக்கரணத் தூய்மை). ஆத்மார்த்தமாக, ப்ரியத்தோடு நாம் தருகின்ற எதையும் ஏற்றுக்கொள்ள அவன் ஸித்தமாக இருக்கிறான்..
"பத்ரம் புஷ்பம் பலம் தோயம்
யோ மே பக்த்யா ப்ரயச்சதி"
"ஒரு இலையோ, பூவோ, கனியோ, ஒரு துளி நீரோ,
எதை நீ ப்ரீதியோடும் பக்தியோடும் தருகிறாயோ, அதை நான் அங்கீகரிக்கிறேன்"..
தனக்குவமையில்லாத…..
பல்லவி
தனக்குவமையில்லாத தனிப்பெருந்தேவனே
உனது மலரடியே அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
வனமாலை துளபம் கௌத்துபமணிந்தவனே
அனந்த சயனனே ஶ்ரீமன் நாராயணனே
சரணம்
மனதாலும் உடலாலும் வாக்காலும் மற்றும்
நினைவாலும் புலன்களாலும் ஆத்மா அறிவினாலும்
இயற்கை குணத்தாலும் செய்யும் கருமங்கள்
அனைத்தும் கேசவனுன் திருவடிக்கேயளித்தேன்