ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்ரம்
தொடர் - 10
காமாரி காமாம் கமலாஸநாதாம்
காம்யப்ரதாம் கங்கணபூஷணஹஸ்தாம்
காஞ்சி நிவாஸம் கனகபிரபாஸாம்
காமாக்ஷி கலயாமி சித்தே
பொருள்: காமனை தகித்த பரமேஸ்வரனின் பத்னியே! செந்தாமரையில் வீற்றிருப்பவளே! பக்தர்களின் மனோ விருப்பங்களை பூர்த்தி செய்பவளே!நினது திருக்கரங்களில் வளையல்களை அணிந்தவளே! பொன்னிறமாக ஜ்வலிப்பவளே! காஞ்சிபுரத்தில் வாசம் செய்பவளே! காமாக்ஷி! என்றும் எமது சித்தத்தில் நிறைந்து அருள் புரிவாய் அம்மா!
காமனை....
பல்லவி
காமனை எரித்த காமேச்வரனின்
வாமத்திலமர்ந்த அவர்தம் துணைவியே
அனுபல்லவி
தாமரை மலரமர் காமாக்ஷியே
மாமறைகள் போற்றும் கேசவன் சோதரி
சரணம்
பாமரர் பக்தர்கள் விரும்பும் வரமருள்பவளே
திருக்கரங்களில் வளையல்களணிந்தவளே
தங்கமயமானவளே காஞ்சியிலுறைபவளே
என் மனக் கோயிலில் எழுந்தருள்வாயே
No comments:
Post a Comment