தேவி சாகம்பரி......
சாகம்பரியை தேவீ மஹாத்மியம் வர்ணிக்கிறது:
சாகம்பரீ நீலவர்ணா நீலோத்பல விலோசலா
கம்பீர நாபிஸ் த்ரிவலீ விபூஷித தனூதரீ
ஸுகர்க்கச ஸமோத்துங்க வ்ருத்த பீந கனஸ்தனீ
முஷ்டிம் சிலீமுகாபூர்ணம் கமலம் கமலாலயா
புஷ்ப பல்லவ மூலாதி பலாட்யம் சாக ஸஞ்சயம்
காம்யானந்த ரஸைர் யுக்தம் க்ஷுத் த்ருண் ம்ருத்யு ஜ்வராபஹம்
கார்முகஞ் ச ஸ்புரத் காந்தி பிப்ரதீ பரமேச்வரீ
சாகம்பரீ சதாக்ஷி ஸா ஸைவ துர்க்கா ப்ரகீர்த்தி தா
சாகம்பரீ நீல வர்ணமானவள், கருநெய்தல் போன்ற கண்ணழகு கொண்டவள், சாமுத்ரிகா லக்ஷணப்படி ஆழ்ந்த நாபியும், மூன்று மடிப்புகளும் கொண்ட அழகிய குறுகிய வயிற்றினை உடையவள். கடினமான, பருத்து எழுந்த வட்ட ஸ்தனங்களை உடையவள். தாமரை மலரில் வீற்றிருப்பவள். அழகிய நான்கு கைகளை உடையவள். ஒரு கையில் தாமரை மலர், மற்றொன்றில் கைப்பிடி நிறைய அம்புகள், பிறிதொரு கையில் ஒளி வீசும் வில் வேறொரு கையில் பசி, தாகம், சாக்காடுகளைப் போக்கும் புஷ்பம், தளிர், வேர், பழம், ஆகியவற்றை ஒன்றாகவும் பிடித்து சாகம்பரி எனும் சதாக்ஷி காட்சி தருகிறாள்
பல்லவி
தேவி சாகம்பரியை மனமாரத்துதித்தேன்
மூவாசைப்பிணி போக்கும் முன்வினைப் பயன் நீக்கும்
அனுபல்லவி
பூவிதழ் மலர்ந்து புன்னகை புரிந்திடும்
ஓவிய வடிவில் காட்சி அளித்திடும்
சரணம்
தாமரை ஏந்திய ஒருகரமும் மற்றும்
அம்புடன் வில்லேந்தும் இருகரமும்
பசிப்பிணி போக்கிடும் திருக் கரமும் கொண்டு
ஆயிரம் கண்ணுடையாள் காட்சி தர...... ( தேவி......)
நீலவண்ணமும் கருவிழியும் கொண்ட
மூன்று மடிப்புடைய இடையுடையாளை
பருத்த அழகிய தனமுடையாளவளை
கமலமலரமர் கேசவன் சோதரியை
No comments:
Post a Comment