கண்டேன் கேசவனை......
பல்லவி
கண்டேன் கேசவனைக் கடல் நிறத்து மேனியனை
கொண்டேன் பரவசம் நான் கோபியரைப் போலவே
அனுபல்லவி
உண்டால் மது மயக்கம் ஒரு பொழுதில் ஓய்ந்துவிடும்
கண்டால் கேசவனைக் காலமெல்லாம் மனம் களிக்கும்
சரணம்
வண்டாடும் சோலையெல்லாம் வடிவழகைக் காட்டுகின்றான்
திண்டாடும் என்குறைகள் தீர்த்து வைக்க ஓடி வந்தான்
கண்ணனவன் குழலூதி மனம் களிக்கச் செய்கின்றான்
மண்ணையுண்ட வாயன் மாமாயன் கோவிந்தன்
No comments:
Post a Comment