நலம் பெறவே......
பல்லவி
நலம் பெறவே சரணடைந்தேன் நரசிம்மன் திருவடிகள்
வளம் கொழிக்கும் பஞ்சமிலாத் தஞ்சையாளித் திருநகரில்
அனுபல்லவி
நிலம் நீர் நெருப்பு நீள்விசும்பு காற்று
உலகனைத்தும் அவனென்று அறிந்துணர்ந்து தினம் வேண்டி
சரணம்
களிறரக்கன் தஞ்சகனை உடல் கிழித்து மாய்த்தவனை
களிநடனம் காளிங்கன் தலைமீது புரிந்தவனை
களிப்புடன் மணிமார்பில் தஞ்சை நாயகியுடனே
ஒளி பொங்கும் எழில் கொஞ்சும் மாதவனைக் கேசவனை
No comments:
Post a Comment