ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்ரம்
தொடர் - 01
ஓம் ஸ்ரீமஹா கணபதயே நமஹ
காஞ்சி கங்கண நூபுர ரத்னகங்கண லஸத் கேயூர ஹாரோஜ்வலாம்
காஷ்மீராருண கஞ்சுகாஞ்சித குசம் கஸ்தூரிகா சர்ச்சிதாம்
கல்ஹாராஞ்சித கல்போக ஜ்வலமுகீம் காருண்ய கல்லோலினீம்
காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்
பொருள்: நாநாவித ரத்னங்களாலான பிரகாசமான கிரீடம், ஹாரம், வளையல், ஒட்டியாணம், கொலுசு ஆகியவற்றை அணிந்து பொலிவுற திகழ்பவளே! காஷ்மீரத்தின் குங்குமப்பூ போன்ற சிவந்த கச்சையை அணிந்திருப்பவளே! கஸ்தூரி திலகத்தினால் அலங்காரமான முன் நெற்றியை கொண்டவளே! கருணை என்னும் கடல் போன்ற வதனத்தில் மலர்ந்திருக்கும் நீலோத்பலம் போன்ற அழகிய விழிகளை உடையவளே! காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கித் துதிக்கிறோம் அம்மா!
காமாக்ஷி தேவி.....
பல்லவி
காமாக்ஷி தேவி உனையே துதித்தேன்
பூமண்டலம் போற்றும் காஞ்சி மாநகர் வளர்
அனுபல்லவி
மாமாயன் கேசவன் அன்பு சோதரி
பூமிநாதனின் இடப்பாகமமர்ந்தவளே
சரணம்
வைர வைடூரியங்கள் பதித்த மகுடமும்
ஆரநவமணி மாலையும் வளையலும்
சீர்மிகு சிவந்த கச்சையுமணிந்தவளே
நெற்றியில் கஸ்தூரி திலகமணிந்தவளே
கருணைக்கடலென மலர்ந்த வதனத்தில்
கருநீலோத்பலம் போல் விழியமைந்தவளே
கற்பகத்தருவே கருநிறத்தவளே
அருள் தரவேண்டுமன அனுதினம் பணிந்து
No comments:
Post a Comment