ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்ரம்
மாகந்த த்ரும மூலதேச மாணிக்ய சிம்ஹாஸனே
திவ்யாம் தீபித ஹேமகாந்தி நிவஹா வஸ்த்ரவ்ருதாம் சுபாம்
திவ்ய கல்பித திவ்யதேஹ பரிதாம் த்ருஷ்டி ப்ரோமதர்பிதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்
பொருள்: மாமரத்தின் அடியில் மாணிக்க சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே! பொன்னிற ஆடையை தரித்து தெய்வீகமாகத் திகழ்பவளே! சர்வாலங்கார பூஷிதையாக, காணும் அனைவர்க்கும் களிப்பை ஏற்படுத்தும் வண்ணம் வீற்றிருப்பவளே! காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!
காமாக்ஷி தேவி......
பல்லவி
காமாக்ஷி தேவி கேசவன் சோதரி
மாமறைகள் போற்றும் உனையே துதித்தேன்
அனுபல்லவி
நாம மாயிரம் உடையவளே ஈசன்
வாம பாகம்தனை வவ்விய ஈச்வரி
சரணம்
காமனும் நாண அலங்காரம் புனைந்து
கோமளமாய் பொன் வண்ண ஆடையணிந்து
மாமரத்தின் கீழ் மாணிக்க ஆசனத்தில்
காஞ்சியில் வீற்றிருக்கும் கற்பகத் தருவே
No comments:
Post a Comment