ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்ரம்
தொடர் - 02
காமாரதி மனப்ரியாம் கமலபூஸேவ்யாம் ரமாராதிதாம்
கந்தர்ப்பாதிக தர்ப்பதன விலஸத் சௌந்தர்ய தீபங்குராம்
கீரலாப விநோதினீம் பகவதீம் காம்ய ப்ரதான வ்ருத்தாம்
காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்
பொருள்: காமாரியான சிவபெருமானின் மனதிற்கினியவளே! பிரம்மன் மற்றும் இலக்குமியால் துதிக்கப்படுபவளே! பிரகாசமான தீபச்சுடரை போன்ற அழகினால் காதற்கடவுளை பழிப்பவளே! கிளிகளுடன் கொஞ்சி விளையாடுவதில் விருப்பம் உடையவளே! வேண்டியதை வரமளிக்கும் தவமாகத் திகழ்பவளே! காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!
காமேச்வரனின்......
பல்லவி
காமேச்வரனின் மனங்கவர் ஈச்வரி
காமாக்ஷியுன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
காமனையுந்தன் சுடரொளியால் மிஞ்சும்
கோமளமே அழகே கேசவன் சோதரி
சரணம்
பூமகள் நான்முகன் துதித்திடும் அணங்கே
கோமளக் கிளிகளை விரும்பிக் கொஞ்சிடும்
கற்பகத் தருவே கருணைக்கடலே
காஞ்சித்திருநகரில் வாசம் புரிபவளே
No comments:
Post a Comment