ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்ரம்
ஹ்ரீம்கார ப்ரணவாத்மிகாம் பிரணமதாம் ஸ்ரீவித்யா வித்யாமயீம்
ஐம் க்லீம் ஸௌம் ருசே மந்த்ரமூர்த்திம் நிவஹா காராம ஸோஷாத்மிகாம்
பிரஹ்மானந்தர சனுபூத மஹிதாம் பிரஹ்மப்ரியாம் வாதினீம்
காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்பொருள்: ஸ்ரீவித்யாவின் சக்தி பிரணவமாக ஜ்வலிப்பவளே! பக்தர்களின் ஜபத்திற்கேற்ற வடிவில் காட்சி அளிப்பவளே! அனைத்துலக உயிர்களின் ஆன்மாவாக பிரகாசிப்பவளே! பிரம்மனால் பூஜிக்கப்படுபவளே! பிரஹ்மானந்தத்தை நல்குபவளே! காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா.
ஶ்ரீவித்யா......
பல்லவி
ஶ்ரீவித்யா மந்திரத்தின் உட்பொருளே காமாக்ஷி
காஞ்சி நகர் கற்பக தருவேயுனைப்பணிந்தேன்
அனுபல்லவி
தேவி கேசவன் சோதரி உனதடியார்
துதித்திடும் வண்ணம் காட்சி அளிப்பவளே
சரணம்
இவ்வுலக உயிர்க்கெல்லாம் உள்ளொளியாயிருப்வளே
அவ்வுலகப் பிரமனுமமரரும் வணங்கிடும்
செவ்விய கமலத் திருவடியுடையவளே
பவ்யமாய்ப் பணிவோர்க்கு ஆனந்தமளிப்பவளே
No comments:
Post a Comment