ஆரென்ன...
பல்லவி
ஆரென்ன சொன்னாலென்ன எனக்கொரு கவலையில்லை
ஐயன் லீலைகளைப் பாட எனக்கு
ஆலாபனம் செய்து பாட- முடிந்தால்
அடவோடும் ஜதியோடும் ஆடி
முடிந்தால் அவன் பெருமை எடுத்துரைத்து
அகிலமெல்லாம் அறிந்து கொள்ள
அனுபல்லவி
நாரதர் மகிழ பாரோர் மனம் களிக்க
கார்வண்ண மேனியனின் கதைகளச்சொல்லி
தேர் நடத்தி பாரதப் போர் நடத்தி அவன்
செய்த லீலைகளை அனைவருக்குமெடுத்துரைத்து
சரணம்
வாலைப்பிடித்தரக்கன் கேசியையழித்த
கேசவன் கதைகளை வாயரப் பாடி
சேலை பல கொடுத்து அபலைக்கருள் தந்த
ஞாலமுண்டவாயனவன் வேலைதனைச்சொல்லி
பாலகனாயந்த நீலவண்ணக் கண்ணன்
கோபியருடன் செய்த மாயங்களைப் பாடி
ஆலிலையில் துயின்ற அழகிய கதைசொல்லி
அகிலத்திலுள்ளோர் அனைவரும் மனம் மகிழ
No comments:
Post a Comment