புண்டரீகவல்லியின்....
பல்லவி
புண்டரீகவல்லியின் பொற்பாதம் பணிந்தேன்
அண்ட சராசரங்கள் தனையாளும் அருள்மிகு
அனுபல்லவி
வண்டாடும் சோலைகள் வயல்வெளிகள் நிறைந்த
தில்லைச் சித்திர கூடமதில் குடி கொண்ட
சரணம்
பண்டு மூவடியால் உலகளந்த தாடாளன்
உண்டு உலகுமிழ்ந்த கேசவன் ஶ்ரீகிருஷ்ணன்
புண்டரீகாக்ஷன் கோவிந்த ராஜன்
கண்டு மனம் மகிழ அருகினில் வீற்றிருக்கும்
No comments:
Post a Comment