ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்ரம்
தொடர் - 03
கதம்பப்ரமத விலஸகமனாம் கல்யாண காஞ்சீரவாம்
கல்யாணாசல பதாம்புஜ யுகளாம் காந்த்யாம் ஜ்வலந்தீம் சுபாம்
கல்யாணாசல கார்முகப்ரியதமாம் கதம்ப மாலாஸ்ரயாம்
காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்
பொருள்: சலங்கைகள் நிரம்பிய கொலுசை அணிந்து ஓசை எழும்ப பெண் அன்னம் போல மென்மையாக நடப்பவளே! மேரு மலையினில் கமலம் போன்ற திருவடிகளை கொண்டு பொலிபவளே! ஸ்வயம்பிரகாசம் ஆனவளே! மேரு மலையை வில்லாக வளைத்த மஹேஸ்வரனுக்கு பிரியமானவளே! கதம்ப மலர்களாலான மாலையை விரும்பி அணிபவளே! காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷீ! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!
கமலமலரடியால்....
பல்லவி
கமலமலரடியால் மேருவை வலம் வரும்
காமாக்ஷியுனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
கமலபதம் தனில் சலங்கைகளணிந்து
அன்னம் போல் நடந்திடும் கேசவன் சோதரி
சரணம்
மேருவை வில்லாய் வளைத்த ஈசன்
காமேச்வரனிடம் பிரியம் கொண்டவளே
கதம்ப மலர்மாலை விரும்பி அணிபவளே
காஞ்சி நகர் வளர் கற்பக தருவே
No comments:
Post a Comment