புஷ்பவல்லித்தாயார்.....
பல்லவி
புஷ்பவல்லித் தாயார் மனம் மகிழ்ந்து போற்றும்
தேகளீசப் பெருமாளே திருப்பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
அஷ்டதிக் பாலரும் முதலாழ்வார் மூவரும்
நான்முகனும் இந்திரனும் மாவலியும் துதித்திடும்
சரணம்
அளந்த திருவடிகள் விண்ணிலும் மண்ணிலுமாய்
வளம் கொழிக்கும் கோவலூர் பதிதன்னில் காட்சி தந்து
உளமுருகி உனைப்பணியும் பக்தருக்கருள் செய்யும்
இளந்தளிரில் கண்வளர்ந்த கருமணியே கேசவனே
No comments:
Post a Comment