அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........
உத்வேல்லித ஸ்தபகிதைர் லலிதைர் விலாஸை:
உத்தாய தேவி தவ காடகடாக்ஷகுஞ்ஜாத் |
தூரம் பலாயயது மோஹ ம்ருகீகுலம் மே
காமாக்ஷி ஸ்தவரமனுக்ரஹ கேஸரீந்த்ர: ||30||
- கடாக்ஷ சதகம்.
காமாக்ஷி தேவியே! உனது அநுக்ரஹமாகிற பெருஞ்சிங்கமானது பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு, அழகிய சேஷ்டையோடு உனது கடாக்ஷமாகிற அடர்ந்த புதரிலிருந்து வெளிவந்து, என்னுடைய அக்ஞானமாகிற மான்கூட்டத்தை விரைவாய் துரத்தி விரட்டட்டும்!
திரு நகர்.....
பல்லவி
திருநகர் காஞ்சியில் அழகுடன் வீற்றிருக்கும்
அருமை அன்னையே காமாக்ஷி தேவி
அனுபல்லவி
வருந்தித் துதித்திடும் அடியாரைக் காத்திடும்
ஏகாம்ரேச்வரி கேசவன் சோதரி
சரணம்
கருணைக்காட்டில் உலவித்திரிகின்ற
அருளெனுமுன் சிங்கம் தன் பிடரி சிலிர்த்து
இருள்சூழென் மன மானைத் துரத்தி
விரட்டி அடித்திட வேண்டுமென்றே
No comments:
Post a Comment