ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்ரம்
ஆதாராதி சமஸ்த சக்ரநிலயாம் ஆத்யந்த சூன்யாம் உமாம்
ஆகாசாதி சமஸ்த பூதநிவஹகராம விசேஷாத்மிகாம்
யோகீந்த்ரைரபி யோகினீ சதகணைராராதிதாம் அம்பிகாம்
காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்
பொருள்: அனைத்து சக்ரங்களுக்கும் ஆதாரமான ஸ்ரீசக்கரத்தில் வாசம் செய்யும் ஆதியந்தமில்லா உமையே! ஆகாயம் முதலான பஞ்சபூத வடிவினளே! யோகத்தில் சிறந்த அம்பிகையே! கோடி கணக்கான யோகியர் மற்றும் யோகினி கூட்டங்களால் சேவிக்கப்படுபவளே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!
சக்கரங்களனைத்திற்கும்....
பல்லவி
சக்கரங்களனைத்திற்கும் ஆதாரமான திருச்
சக்கரத்தில் வீற்றிருக்கும் அம்பிகையே உமையே
அனுபல்லவி
அக்கினி காற்று நிலம் நீர் ஆகாயமென
பஞ்சபூத வடிவானவளே
சரணம்
யோகியர் யோகினிகள் பலரும் துதித்திடும்
யோகத்தில் சிறந்தவளே கேசவன் சோதரியே
ஆதியந்தமில்லா காமாக்ஷி தேவியே
காஞ்சித்தலம் வளர் கற்பக விருட்சமே
No comments:
Post a Comment