ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்ரம்
சித்தானந்த ஜனஸ்ய சின்மய சுகாகாராம் மஹாயோகினீம்
மாயா விஸ்வ விமோஹினீம் மதுமதீம் த்யாயேத் சுபாம் ப்ராஹ்மணீம்
த்யேயாம் கின்னர சித்த சாரணவதூ கேயாம் சதா யோகிபீம்
காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்
பொருள்: ஞானிகளுக்கு உனது தெய்வீக வடிவினால் ஆனந்தத்தை அளிப்பவளே! யோகத்தில் சிறந்தவளே! தேனினும் இனிமையானவளே! ஜகம் அனைத்தையும் மோஹிக்கச் செய்பவளே! ஞானமாக விளங்குபவளே! சகலருக்கும் மங்களத்தை அருள்பவளே! சித்த, கின்னர, சாரண ஸ்த்ரீக்களால் போற்றப்படுபவளே! அனைவராலும் தியானிக்கத் தக்கவளே! காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!
உலகனைத்தும்.....
பல்லவி
உலகனைத்தும் மோகிக்கும் உமையே காமாக்ஷி
யோகத்தில் சிறந்தவளே கேசவன் சோதரி
அனுபல்லவி
பலவிதமான தேவகன்னியரும்
சித்த கின்னரப் பெண்களும் போற்றும்
சரணம்
நலம் தரும் தெய்வீக வடிவம் கண்டு
உளம் களிக்கும் ஞானியர்கள் உடனிருப்பவளே
தலங்களுள் சிறந்த காஞ்சிவளர் கற்பகமே
தேனினுமினியவளே தேவி உனைத் துதித்தேன்
No comments:
Post a Comment