பார்த்தேன்.......
பல்லவி
பார்த்தேன் பரவசமடைந்தேன் பள்ளிகொண்டானை
திருவரங்கம் தனில் கிடந்த ஶ்ரீ ரங்கநாதனை
அனுபல்லவி
கோர்த்த மலர் மாலையைத் தான் சூடிக் கொடுத்தவள்
கோர்த்த பாமாலையில் மனம் மகிழ்ந்த அரங்கனை
சரணம்
நேர்த்தியுடன் திருமகளும் பூமகளும் பணியும்
கீர்த்தி மிகு வைகுண்டம்தனில் விளங்கும் நாரணனை
நாரதரும் நான்முகனும் நான்மறையும் தொழுதேத்தும்
பாற்கடலில் அரவணையில் துயிலுறும் கேசவனை
தாளம்: மிச்ர ஜம்பை
No comments:
Post a Comment