அருள்தர வேண்டினேன்.....
பல்லவி
அருள்தர வேண்டினேன் கோவிந்தராஐனை
கருத்தினில் இருத்தி திருவடி பணிந்து
அனுபல்லவி
இருள் சேரென் வாழ்வு ஒளியுறச் செய்திட
பொருள் புகழ் நல்வாழ்வு அனைத்தும் பெறவே
சரணம்
திருமகள் புண்டரீகவல்லியும் கண்வரும்
நாரதர் பதஞ்சலி வியாக்கிரபாதரும்
திருச்சித்ர கூடம்தனில் விருப்பமுடன் துதிக்கும்
தேவாதி தேவனை மாதவனைக் கேசவனை
No comments:
Post a Comment