பார்கவி....
பல்லவி
பார்கவி உனதிரு மலர்ப்பதம் பணிந்தேன்
பாற்கடல் அளித்த மாதவமே தேவி
அனுபல்லவி
பார் புகழ் சென்ன கேசவன் தனது
மார்பணியாய் விளங்கும் திருமகளே
சரணம்
தேர் நடத்தி பாரதப் போர் நடத்திய
பார்த்தசாரதி கேசவன் துணைவியே
நாற்கவிகள் போற்றும் வேதவல்லித்தாயே
கார்குழலி நீயே எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment