மூன்றாம் திருவந்தாதி(9)......!!!
கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்*
மண்அளந்த பாதமும் மற்றுஅவையே* எண்ணில் கருமா முகில்வண்ணன் கார்க்கடல் நீர்வண்ணன்*
திருமா மணிவண்ணன் தேசு.
ஸ்ரீபேயாழ்வார் - 3ம் திருவந்தாதி(9)
கரிய பெரிய மேகம் போன்ற வடிவையுடையவனும்
கரியகடல் நீரின் நிறம்போன்ற நிறமுடையவனும்
அழகிய நீலமணி போன்றவனுமான எம்பெருமானுடைய அழகை ஆராய்ந்து நோக்குமளவில்,
திருக்கண்ணும்
தாமரைப்பூப்போன்றவை திருக்கைத்தலங்களும்
அத்தாமரைப் பூப்போன்றவையே,
உலகளந்த திருவடிகளும்
அத்தாமரைப் பூப்போன்றவையே.
படம் - அன்பில் ஸ்ரீசுந்தர ராஜ பெருமாள்
நினைத்துனை.....
பல்லவி
நினைத்துனை தினம் துதித்தேன் நீலவண்ணனே
எனையாண்டருள்வாயென் சென்ன கேசவனே
அனுபல்லவி
உனைப் பணிந்திடுமடியார்கெல்லாம்
அனைத்து நலன்களும் அள்ளியளிப்பவனே
சரணம்
கருமேகம் போல் வடிவுடையவனே
கருங்கடல் நிறத்தவனே கமலநாபனே
கருநிறவிழியாடும் கமலக்கண்ணனே
திருவடித்தாமரையால் உலகளந்தவனே
No comments:
Post a Comment