என்னைப் பெற்ற......
பல்லவி
என்னைப் பெற்ற தாயே என் பாக்யமே
உன்னையே துதித்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
முன்னம் கடலரசன் கர்வம் தீர்த்திட
தின்னனூர் திருத்தலத்தில் எழுந்தருளிக் காட்சிதரும்
சரணம்
இன்னிசை வாணியும் மலைமகளும் நேசிக்கும்
அன்னையே பொன் மகளே சுதாவல்லியே
பன்னக சயனன் கேசவன் துணைவியே
முன்செய்த பழவினைப் பயன்கள் தொலைந்திட
No comments:
Post a Comment