ஆதவகிரணம்.......
பல்லவி
ஆதவகிரணம் பட்டதும் மலரும்
கமலமலர் போல் காட்சியளிப்பவனே
அனுபல்லவி
மாதவனே கேசவனே ஶ்ரீரகு ராமா
பூதலம் போற்றும் ஆதவகுலத்தோனே
சரணம்
சீதரனே உனது அழகிய அங்கங்கள்
யாதும் பங்கயமே பங்கய நாபனே
பாதமும் கண்களும் அனைத்தும் கமலமே
மாதவள் வசிப்பதுமுன் இதயகமலமே
No comments:
Post a Comment