பாரில் உனையன்றி.......
பல்லவி
பாரில் உனையன்றி வேறில்லை எனக்குத்துணை
மாரி மகமாயி சமயபுர நாயகியே
அனுபல்லவி
நேரில் உனைக்கண்டு மலர்த்தாள் பணிந்தேன்
நேரிழையே தாயே கேசவன் சோதரியே
சரணம்
ஊரிலுள்ள காணியும் உற்றமும் சுற்றமும்
பேரிலுள்ள பொருளெதுவும் என்றும் சதமில்லை
காரிகையே உன் பதமே சதமென்றறிந்து
கோரிக்கை வைத்தேன் எனைக் காத்தருள்வாய்
No comments:
Post a Comment