என்றுமுன்......
பல்லவி
என்றுமுன் பாதாரவிந்தமே எந்தன் துணை
ஶ்ரீ ராமா பணிந்தேன் திருவடி சரணம்
அனுபல்லவி
கன்று பசுவை அழைத்தது போலுனையழைத்தேன்
அன்றொரு நாள் வேழம்தனைக் காத்ததுபோலெனைக்காப்பாய்
சரணம்
சென்றிலங்கை அரக்கன் கதை முடித்த ராகவனே
குன்றைக் குடையாக்கி புவி காத்த கேசவனே
பன்றியாயவதரித்து பூமியை மீட்டவனே
இன்று எனக்கருள வேண்டுமெனத் துதித்தேன்
No comments:
Post a Comment