மனோவ்ருந்தீரஸ்து ஸம்ருதிஸ்தே ஸமஸ்தா:
ததா வாக்ப்ரவ்ருத்தி: ஸ்துதி: ஸ்யான் மஹேசி
சரீரப்ரவ்ருத்தி: ப்ரணாம் க்ரியா ஸ்யாத்ப்ர
ஸீத க்ஷமஸ்வ ப்ரபோ ஸந்ததம் மே!
பேசுவதெல்லாம் அம்பிகே உன்னுடைய மந்திர ஜபம்.கை, கொண்டு அசைப்பதெல்லாம் அம்பிகே உன்னுடைய முத்திரைகள். கால் கொண்டு நடப்பதெல்லாம் அம்பிகே உனக்கு ப்ரதக்ஷிணம்.உண்பது எல்லாம் உன்னை நினைத்துக்கொண்டு, உனதருளால் வயிற்றில் உள்ள ஹோம நெருப்புக்கு இடும் ஆகுதி. படுப்பதே உனக்கு செய்யும் நமஸ்காரம்.தாயே திருவருள் புரிய வேண்டும். எப்போதும் நான் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும்.இங்கு சந்தோஷத்திற்கு காரணமான எல்லா செயல்களும் உனக்கான புஷ்பாஞ்சலி ! தேவீ சரணம் !
அகிலம் போற்றும்......
பல்லவி
அகிலம் போற்றும் அம்பிகையே தாயே
புகலிடம் நீயே கேசவன் சோதரி
அனுபல்லவி
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவளே
ஜகம் புகழ் மாயே எனக்கருள்வாயே
சரணம்
கையசைவனைத்தும் சின் முத்திரைகள்
பேசும் பேச்சுக்கள் மந்திர ஜபங்கள்
நடப்பதும் நிற்பதும் உனை வலம் வருதலே
உண்ணும் சோறும் உனக்காகுதியே
கிடப்பதுமுன்னை வணங்கிடும் பொருட்டே
மகிழ்வுற செய்வதெல்லாம் மலரஞ்சலியே
அனைத்து செயல்களுமுனதருளாலே
குறைகளைப் பொறுத்து நிறைகளை ஏற்பாய்
No comments:
Post a Comment