மஹா சிவராத்திரி ஸ்பெஷல் !
ஸ்நாத்வா ப்ரத்யூஷகாலே ஸ்நபன விதிவிதௌ
நாஹ்ருதம் காங்கதோயம்
பூஜார்த்தம் வா கதாசித் பஹுதரஹ ஹநே அகண்ட
பில்வீதலம் வா!
நாநீதா பத்மமாலா ஸகஸிவிகஸிதா கந்த
புஷ்பைஸ்த்வதர்த்தம்
க்ஷந்தவ்யோ மேsபராத:சிவ சிவ சிவ:....
ஸ்ரீமஹாதேவ சம்போ!!
ஒரு நாளாவது அதிகாலையில் குளித்து விட்டு, சிவாபிஷேகம் செய்விக்க கங்கை ஜலம் கொணர்ந்தேணா?அல்லது பூஜிப்பதற்கு அடர்ந்த புதரில் சென்று முறிவுபடாதபில்வங்களை கொணர்ந்தேனா?இல்லை... கந்தம், புஷ்பம் இவற்றோடு தாமரை மாலையாவது கொணர்ந்தேனா?இல்லவே இல்லையே!இந்த தவறை ஹேசிவ!மன்னித்தருள்வீராக!
இமையா துயிரா திருந்தாய் போற்றி ! என் சிந்தை நீங்கா இறைவா போற்றி !
தவறிழைத்த.......
பல்லவி
தவறிழைத்த எனக்குன் அருள்தர வேண்டினேன்
சிவனே கேசவன் நேசனே ஈசனே
அனுபல்லவி
பவப்பிணி மாயையால் கட்டுண்டு நானும்
கவலைகளின்றி சுற்றித் திரிந்தேன்
சரணம்
சிவனுனை நீராட்ட கங்கை நீர் தரவில்லை
புதர் நடுவே திரிந்து பில்வம் கொணரவில்லை
வாசனைப் பொருள் பூக்கள் தாமரை மாலைகள்
இவையெதுவும் அளிக்காத நீசனென் பிழைபொறுத்து
No comments:
Post a Comment