ஶ்ரீ காமாக்ஷி ஸ்தோத்திரம்
விஷ்ணு பிரம்ம அமரேந்த்ர ப்ருஷத் கோடீர பீடஸ்தலாம்
லக்ஷாரஞ்சிதபத பத்மயுகளாம் ரகேந்து பிம்பானனாம்
வேதாந்தாகம வேத்ய சிந்த்ய சரிதாம் வித்வத் ஜனைரவ்ருத்தாம்
காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்
பொருள்: பிரம்மா விஷ்ணு மற்றும் தேவர்களின் மகுடம் தரித்த சிரசினை தனது ஆசனமாக கொண்டவளே! அரக்கு போன்ற சிவந்த திருவடிக் கமலங்களை உடையவளே!
முழு நிலவை போன்ற பிரகாசமான வதனத்தை உடையவளே! வேத, ஆகமங்களால் ஆராய்ந்து தேடத் தக்கவளே! ஞானியர் கூட்டத்தால் சூழப்பட்டவளே!
காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!
மனமாரப் பணிந்துனை.....
பல்லவி
மனமாரப்பணிந்துனை வணங்கித் துதித்தேன்
காஞ்சி வளர் கற்பக தருவே காமாக்ஷி
அனுபல்லவி
புனிதர்கள் ஞானியர் புடைசூழ நிற்கும்
வனிதையே திங்கள் திருமுகத்தாளே
சரணம்
மகுடமணிந்த பிரமன் கேசவன்
அமரர்கள் சிரசினை ஆசனமாய்க் கொண்டவளே
மறைகள் ஆகமங்களாராயும் மாயவளே
சிவந்த கமலமலர் பாதங்களுடையவளே
No comments:
Post a Comment