Thursday, 25 February 2021

மங்களாம்பிகையை.......

 மாசி மகம் ஸ்பெஷல் ! 


மங்களாம்பிகை தேவி 51 அட்சரங்களுடன் கூடிய சக்தி வடிவினளாகவும், மகாயாகம் என்று வர்ணிக்கப்படுகின்ற ஸ்ரீவித்யா பூஜையில் விருப்பம் கொண்டவளாகவும், அமுதேச சிவபெருமானின் அன்புக்குப் பிரியமானவளாகவும், 64 கலைகளோடு கூடிய மூலாதார சக்கரத்தில் வீற்றிருப்பவளாக வும் விளங்குகிறாள். ஸ்ரீ மங்களாம்பிகை, மருவார் குழலி (மாறாத மணத்தை கொண்ட கூந்தலை உடைய நாயகி )  எனவும் சிறப்புப்பெயரால் வழங்கப்பெறுகிறார் .சர்வமங்கள ரூபிணியாகவும், ஞானத்தை அளிப்பவளாகவும், நமது மனவிருப்பத்தை அறிந்து கிடைப்பதற்கரிதான பொருளைத் தருபவளாகவும், நோய்கள், தோஷங்களை அகற்றி, தரித்திரங்களை விலகச் செய்து, நாம் விரும்புகிற அனைத்து ஐஸ்வர்யங்களையும் அருள்பவளாகவும் காட்சி தருகிறாள். மந்திர அட்சரங்கள் எல்லாம் அவளுக்குள் ஒடுங்கியிருப்பது போற்றுதலுக்குரியது என இத்துதி அம்பிகையின் சக்தியை எடுத்துச் சொல்கிறது. சர்வமங்கள ரூபிணி ஸ்ரீ மங்களாம்பிகை சடாதார மங்கள துதி !


                                         மங்களாம்பிகையை.......


                                                          பல்லவி

                                            மங்களாம்பிகையை மருவார் குழலியை

                                            திங்கள்பிறையணிந்தசங்கரியைத்துதித்தேன்

                                                           அனுபல்லவி

                                             கங்கையையணிந்த கும்பேச்வரரின்

                                             பங்கிலுறைபவளே மங்களம் தருபவளை

                                                                 சரணம்

                                             சிங்கவாகனம்தனில் வீற்றிருப்பவளை

                                             பங்கயநாபன் கேசவன் சோதரியை

                                             மங்காத புகழ்மிகு மகாயாகமெனும்

                                             ஶ்ரீ வித்யா மந்திரத்தின் உட்பொருளாயிருப்பவளை

                                              மங்களம் தந்திடும் மூலாதாரமெனும்

                                              திருச்சக்கரம்தனில் வீற்றிருப்பவளை

                                              பொங்கரவணிந்தளை திரிபுரசுந்தரியை

                                              மங்காத புகழ் மேவும் திருக்குடந்தைப் பதிவளர்

                                              


No comments:

Post a Comment