சியாமளா நவராத்திரி ஸ்பெஷல் !
கெளரீம் தாடிம புஷ்பவர்ண விலஸத் திவ்யாம்பராலங்க்ருதாம்
சந்த்ராம்சூபம சாரு சாமரகர ஸ்ரீ பாரதீ ஸேவிதாம்
நாநாரத்ன ஸுவர்ண தண்ட விலஸன் முக்தாதபத்ரோஜ்வலாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!
மாதுளைப் புஷ்பம் போன்ற வர்ணமுடைய வஸ்திரத்தால் அலங்கரிக்கப்பட்டவளும், சந்திர கிரணம் போன்ற அழகான் சாமரங்களைக் கையில் ஏந்தி லக்ஷ்மியாலும், சரஸ்வதியாலும் ஸேவிக்கப்படுபவளும், பலவிதமான ரத்னங்களுடன் கூடிய தண்டத்துடன் கூடிய முத்துக் குடையுடையவளுமான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியான, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.
வாசா வா மநஸாபி வா கிரிஸுதே காயேன வா ஸந்ததம்
மீனாக்ஷீதி கதாசிதம்ப குருதே த்வந்நாம ஸங்கீர்த்தனம்
லக்ஷ்மீஸ்தஸ்ய க்ருஹே வஸத்யனுதினம் வாணி ச வக்த்ராபுஜே
தர்மாத்யர்த்த சதுஷ்டயம் கரதலப்ராப்தம் பவேந்நிச்சய:
அம்பிகே!, மலையவான் மகளே, வாக்கினாலோ, மனசினாலோ, சாரீரத்தினாலோ எப்போதாவது இடைவிடாமல் ஒருவன் மீனாக்ஷி என்று உனது நாமத்தைச் சொல்வானேயானால், அவனுடைய வீட்டில் லக்ஷ்மியானவள் தினந்தோறும் வசித்து வருவாள். அதேபோல், அவனுடைய முகபத்மத்தில் சரஸ்வதியும் விளங்குவாள். தர்ம, அர்த்த, காம, மோக்ஷமாகிய புருஷார்த்தங்களும் அவன் கைகளில் கிடைத்ததாகும், இது நிச்சயம். அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
அங்கயற்கண்ணியின்.....
பல்லவி
அங்கயற்கண்ணியின் பாதம் பணிந்தேன்
சங்கத்தமிழ் வளர்த்த மதுரையை அரசாளும்
அனுபல்லவி
பங்கய கரத்தில் கிளிதனை ஏந்திய
பாண்டியன் புதல்வி கேசவன் சோதரி
சரணம்
திங்கள் கிரணமெனும் சாமரங்கள் வீசும்
திருமகளும் கலைமகளும் உடனிருந்து துதிக்கும்
மாதுளம் பூ நிறத்து ஆடையணிந்தவளை
ரத்தினங்கள் பதித்த முத்துக்குடையுடைய ...( அங்கயற்...)
மனதிலும் வாக்கிலும் நினைவிலும் எப்போதும்
தினமந்த மீனாளின் திருநாமமுரைத்திடும்
புனிதருக்குத் திருமகளும் கலைமகளுமென்றும்
நலன்களனைத்தும் நாளுமளித்திடுவார்
No comments:
Post a Comment