கலைவடிவில்.....
பல்லவி
கலைவடிவில் சிலையான கணபதியைத்துதித்தேன்
நிலைகொள்ளாதலையும் என் மனம் நிலைபெறவே
அனுபல்லவி
மலைமகளின் தலைமகன் கேசவன் மருகன்
மலைமீது நின்றாடும் குமரனின் தமையன்
சரணம்
புலன் வழி செல்லும் விலங்கெனத் திரியும்
அலைபாயும் மனக்குரங்கை அடக்கிட வேண்டியும்
நலம் புரியுமடியார்களுடன் கூடிடவும்
அவனருள் வேண்டி அவன் தாள் பணிந்து
No comments:
Post a Comment