யஸ்யா: கடாக்ஷ விக்ஷா க்ஷண
லக்ஷம் லக்ஷிதா: மஹேசா: ஸ்யு: |
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ ஸா மாம் அபி
வீக்ஷதாம் லக்ஷ்மீ: ||
ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் .
"எந்த ஒரு பிராட்டியின் கடைக்கண் பார்வைக்கு ஒரு நொடிப்பொழுது இலக்கானாலும் மிகுந்த கைங்கர்யச் செல்வம் பெற்றவர்கள் ஆவார்களோ அப்படிப்பட்ட, ஸ்ரீரங்கராஜனின் பட்டமஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் என்னையும் தனது கடைக்கண் கொண்டு பார்க்கவேண்டும்"
கடைக்கண்.........
பல்லவி
கடைக்கண் விழிப்பார்வை நொடிப்பொழுது கண்டாலும்
மடை திறந்தவெள்ளமென செல்வம் அருள் பெருகும்
அனுபல்லவி
குடையைக் குன்றாக்கி குவலயம் காத்த
அரங்கனின் மார்பினில் வீற்றிருப்பவளே
சரணம்
இடையர் குலத்துதித்த கேசவன் மனங்கவர்
கடலரசன் திருமகளே மாகாலக்ஷ்மியே
கடைக்கணியே தாயே ரங்கநாயகியே
தடையின்றி உனதருள் யான் பெறவே வேண்டினேன்
No comments:
Post a Comment