வசந்த பஞ்சமி ஸ்பெஷல் !
சரஸ்வதி தேவியின் திருவுருவத்தைத் தியானிக்க ஒரு அருமையான ஸ்லோகம் இது!
"யா குந்தேந்து துஷார ஹார தவளா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர தண்ட மண்டித கரா
யா ஸ்வேத பத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவை: சதா பூஜிதா
சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி
நிச்சேஷ ஜாட்யாபஹா"
யா குந்த இந்து துஷார ஹார தவளா -
யார் சந்திரனைப் போலவும் பனியைப் போலவும் வெண்மையான மல்லிகை மாலையை அணிந்து கொண்டிருக்கிறாளோ
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா -
யார் வெண்மையான ஆடையை அணிந்திருக்கிறாளோ
யா வீணா வர தண்ட மண்டித கரா -
யார் வீணையை ஏந்திய வரம் தரும் திருக்கைகளை உடையவளோ
யா ஸ்வேத பத்மாஸனா -
யார் வெண்தாமரையில் வீற்றிருப்பவளோ
யா ப்ரஹ்ம அச்யுத சங்கர ப்ரப்ருதிபி: தேவை: சதா பூஜிதா -
யார் பிரம்மன் அச்சுதன் சங்கரன் முதலிய தேவர்களால் என்றும் வணங்கப்படுபவளோ
சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி நிச்சேஷ ஜாட்யாபஹா -
செயலின்மையையும் அறிவின்மையையும் அறவே நீக்கும் அந்த ஸரஸ்வதியென்னும் தாய் என்னை என்றும் காக்கட்டும்!
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
ஸரஸ்வதி நீயே.....
பல்லவி
ஸரஸ்வதி நீயே எனக்கருள வேண்டும்
சிரம் தாழ்த்தி கரம் கூப்பி திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
பிரமன் கேசவன் சங்கரன் சுரபதி
நரர்சுரரனைவரும் வணங்கிடும் தேவி
சரணம்
வரம் தரும் கரங்களில் வீணையை ஏந்தி வெண்
அரவிந்த மலர்தனில் வீற்றிருப்பவளே
குளிர் மதி நிற மல்லி மாலையணிந்தவளே
அறிவும் செயல் திறனும் அளித்திடும் அன்னையே
No comments:
Post a Comment