மஹா சிவராத்திரி ஸ்பெஷல் !
12. சந்த்ரோத்பாஸிதசேகரே ஸ்மரஹரே கங்காதரே சங்கரே
ஸர்ப்பைர் பூஷித கண்ட கர்ணவிவரே
நேத்ரோத்தவைச்வானரே!
தந்தித்வக்க்ருத ஸுந்தராம்பரதரே
த்ரைலோக்யஸாரே ஹரே
மோக்ஷார்த்தம் குரு சித்த விருத்திமமலாம்
அன்யைஸ்து கிம் கர்மபி!! சந்திரப் பிறையணிந்தவரும், மன்மதனையழித்தவரும், கங்கையை தாங்கியவரும், காது, கழுத்து ஆகிய இடங்களில் ஸர்ப்பாபரணம் அணிந்தவரும், நெற்றிக்கண்ணில் அக்னியை வைத்துள்ளவரும், யானைத்தோலாகிய அழகிய ஆடையணிந்தவரும், மூவுலகுக்கும் இன்றியமையாத செல்வமாய் திகழ்பவருமான சிவனை மோக்ஷம் வேண்டி ஹேமனமே சிந்திப்பாயாக, மற்ற கர்மாக்கள் எதற்கு?
மாசிலா மணியை......
பல்லவி
மாசிலா மணியை நற்கதி பெறவேண்டி
ஈசனைக் கேசவன் நேசனைத் துதிப்போம்
அனுபல்லவி
வாசமலர் மாலை அணிந்த சடாதரனை
காமனை எரித்தவனை மூவுலகை ஆள்பவனை
சரணம்
கேசபாசத்தில் கங்கையும் பிறை நிலவும்
கழுத்தில் காதில் சர்ப்பாபரணமும்
நெற்றிக் கண்ணில் அக்னியும் வைத்திருக்கும்
அழகிய ஆனைத் தோலணிந்த சிவனை
No comments:
Post a Comment